எளிமையாக சொல்வதென்றால்,ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு எதேனும் ஒரு முறையில் (கீழே விளக்கப்பட்டுள்ளது) சேமித்து வைப்பதன் மூலம் பெறப்படும் வருமானம் முதலீடு ஆகும்.
சரி !, எங்கு எங்கெல்லாம் முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம் ?
சேமிப்பு கணக்கு (Savings account)
நீங்கள் வங்கிகளில் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கு (Savings account) கூட ஒரு வகையான முதலீடுதான். எப்படி என்கிறீர்களா ?…. நீங்கள் சேமிப்பு கணக்கில் வைத்துள்ள தொகைக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவ்வங்கி குறிப்பிட்ட சதவிகிததின் (Percentage) அடிப்படையில் வட்டி (interest) தருவார்கள். இது மிகவும் பாதுகாப்பான முதலீடு, ஆனால் என்ன இதில் பெறக்கூடிய வருமானம் மிகக் குறைவானதே.
நிரந்தர வைப்பு கணக்கு (Fixed Deposits)
அடுத்து, நிரந்தர வைப்பு கணக்கு (Fixed Deposits). இதுவும் ஒரு பாதுகாப்பான முதலீடு. இம்முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டி, சேமிப்பு கணக்கை வீட சற்று அதிகமே !. ஆனால் இம்முறையால் முதலீடு செய்த தொகையை சிறிது காலத்திற்கு பயன்படுத்த முடியாது. இதனை லாக்கிங் பீரியட் (Locking period) என்பார்கள். பெரும்பாலான வங்கிகளில் குறைந்த பட்சம் லாக்கிங் பீரியட் ஐந்து வருடங்களாகும் (minimum locking period of 5 years) .
அஞ்சலக சேமிப்பு கணக்கு (Post office savings)
அதே போல, அஞ்சலக சேமிப்பு கணக்கு (Post office savings), தேசிய சேமிப்பு பத்திரம் (National saving certificate) , கிசான் விகாஸ் பத்திரம் (Kissan vikas patra) போன்றவைகள் கூட மிக பாதுகாப்பன முதலீடுகள். மேலும், இதில் பெறப்படும் வட்டி நிரந்தர வைப்பு கணக்கை விட அதிகம். சரி !, நீங்கள் சந்தோசம் அடைவதற்க்குள் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், இதில் லாக்கிங் பீரியட் சுமாராக ஆறு அல்லது ஏழு வருடங்கள். (நிரந்தர வைப்பு கணக்கை விட சற்று கூடுதலான லாக்கிங்).
சொத்துக்களில் முதலீடு (Investing on home/Land/gold)
அடுத்து, சிலர் அசையா சொத்துக்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆமாம், இம்மாதிரியான முதலீடுகளில் லாபம் மிக அதிகம். உதாரணமாக வீட்டு மனை, நிலம், தங்கம் போன்றவைகளில் முதலீடு செய்வது. இம்மாதிரியான முதலீடுகள் நீண்ட காலத்திற்கு வைத்திருந்து, பிறகு நல்ல விலைக்கு விற்று விடுவதின் மூலம் லாபம் பார்க்கலாம்.